உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டுமான தொழிலாளர் சங்க மாநில மாநாடு 

கட்டுமான தொழிலாளர் சங்க மாநில மாநாடு 

புதுச்சேரி: புதுச்சேரி மாநில கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு, தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் கலியன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி ஜெகதீசன் மாநாட்டு கொடியேற்றினார். பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்றார். பாகூர் பொறுப் பாளர் சேகர், அரியாங்குப்பம் தச்சு தொழிலாளர் சங்க சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் சீனுவாசன் வாழ்த்தி பேசினார். மாநாட்டில் கட்டட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கிட வேண்டும். நலவாரியத்தில் புதிய உறுப்பினராக விண்ணப்பித்த தொழிலாளர்களை அலைக்கழிக்காமல் விரைந்து ஆய்வு செய்து உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும். வீடற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி தொகுப்பு வீடுகளை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை