உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

புதுச்சேரி: காரைக்காலில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் காணொலி வாயிலாக பிரதமரின் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் ரூ.130 கோடி மதிப்பில் நவீன ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிக்கு, பிரதமர் மோடி வரும் 11ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி, அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் சட்டசபையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் பன்னீர், மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், காணொலி வாயிலாக காரைக்கால் கலெக்டர் ரவி பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், செயற்பொறியாளர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பிரதமரின் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வேண்டிய முன்னேற்பாடுகளையும், நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி