உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீராம்பட்டினம் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

வீராம்பட்டினம் கோவில் தேரோட்டம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

அரியாங்குப்பம்: வீராம்பட்டினம் தேரோட்டம் விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு தொடர்பாக எஸ்.பி., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டம், வரும் 15ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். எஸ்.பி., பக்தவச்சலம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேரோட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அன்று சுதந்திர தினம் என்பதால், பள்ளி, கல்லுாரிகள் விடுமுறையால், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், முக்கிய இடங்களில் விழிப்புணர்வுடன் இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்துவது, வீராம்பட்டினம் கடற்கரை பகுதியில், லைப் கார்டு வீரர்களை அமர்த்துவது, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, குடிநீர், வசதி, சுகாதார வசதி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப் பட்டன. கூட்டத்தில், கோவில், திருப்பணிக்குழு தலைவர் காத்தவராயன், மக்கள் குழு தலைவர் விஸ்வநாதன், அரியாங்குப்பம் சுகாதார நிலைய மருத்து அதிகாரி தாரணி, இன்ஸ்பெக்டர்கள், ஆறுமுகம், கண்ணன் மற்றும் வீராம்பட்டினம், கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி