வாக்காளர் பட்டியல் திருத்த பணி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
வில்லியனுார்: புதுச்சேரி தேர்தல் துறை சார்பில், வில்லியனுார் வ ட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அதிகாரி தயானந் தெண்டுல்கர் தலைமையில் வி ல்லியனுார் மற்றும் உழவர்கரை தொகுதியில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் இரு தொகுதி சார்பில், பா.ஜ., அங்குதாஸ், காங்., ராஜ்குமார், சத்தியமூர்த்தி, தி.மு.க., மணிகண்டன் மற்றும் அருட்செல்வி உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த நோக்கம், செயல்முறை மற்றும் காலக்கட்டம் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் ஓட்டுச் சாவடி நிலை முகவர்கள் மற்றும் ஓட்டுச் சாவடி அதிகாரிகள் இடையிலான ஒருங்கிணைப்பு, சமமான பங்கேற்பு மற்றும் தகவல் பரப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது.