உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய், மகளை திட்டிய தம்பதி மீது வழக்கு

தாய், மகளை திட்டிய தம்பதி மீது வழக்கு

பாகூர்: பாகூர், மூலநாதர் நகரை சேர்ந்தவர் விமலாதேவி 22; கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி இவர் வசித்து வரும் வீதியில் சிமென்ட் ரோடு போடுவதற்கான வேலை நடந்தது. ரோட்டில் உள்ள தேவையில்லாத மண்ணை, விமலாதேவி எடுத்து தனது வீட்டின் பின்புறம் கொட்டி உள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் தண்டபாணியின் மனைவி செல்வி என்பவர் விமலாதேவியை திட்டினார். இதனை விமலாதேவியின் தாய் தட்டிக் கேட்டார். அதற்கு, தண்டபாணி, விமலாதேவியையும், அவரது தாயையும் அவதுாறாக பேசினார். விமலாதேவி புகாரின் பேரில், தண்டபாணி, செல்வி ஆகியோர் மீது பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை