உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கார் மோதி தம்பதி காயம்

 கார் மோதி தம்பதி காயம்

பாகூர்: ஏம்பலத்தை சேர்ந்தவர் குமரேசன் 65; இவர் கடந்த 19ம் தேதி காலை தனது மனைவி அன்னம் 58; என்பவரை, ஆக்டிவா ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு திருவந்திபுரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை, பாகூர் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த மாருதி எர்டிகா கார், ஸ்கூட்டர் மீது மோதியது. குமரேசன், அன்னம் ஆகியோர் படுகாயமடைந்தனர். பிள்ளையார்குப்பம் தனியார் மரத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ