கிரிக்கெட் போட்டி எம்.எல்.ஏ., பரிசளிப்பு
காரைக்கால், டிச.25 -கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ராஜசேகரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார். காரைக்கால் திருநள்ளாறு தொகுதி, செல்லுாரில் கடந்த 19ம் தேதி திருநள்ளார் பிரீமியர் லீக் 2025 ஆண்டு ஆடுகளம் டர்பில் கிரிக்கெட் போட்டியை ராஜசேகரன் எம்.எல்.ஏ.,தொடங்கி வைத்தார். இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10க்கு மேற்பட்ட கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. அதில் முதலிடத்தை பிடித்த ஆடுகளம் அணிக்கு ராஜசேகரன் எம்.எல்.ஏ.,வும், 2ம் இடத்தை பிடித்த பயர் டிராகன் அணிக்கு மீனாட்சி சுந்தரமும், மூன்றாம் இடத்தை பிடித்த கலர் பாய்ஸ் அணிக்கு சிவானந்தமும், நான்காம் இடத்தை பிடித்த ரன் ரைடர் அணிக்கு சண்முகமும், சிறப்பு பரிசாக ரூ.10 ஆயிரத்தை வெங்கடேஷ் பெருமாள் வழங்கினார். தொடர்ந்து ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகர் விருதுகள் வழங்கப்பட்டன.