உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு

கிரிக்கெட் போட்டி ஏலம் 200 வீரர்கள் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜனவரியில் நடக்க உள்ள, டி-10 கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் நடந்தது.புதுச்சேரி கிராமப்புற வளர்ச்சி கிரிக்கெட் சங்கம் சார்பில், சூப்பர் பிளாஷ் சீரியஸ் 'டி10 -2025' கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் சமீபத்தில் பிள்ளையார் குப்பம், தனியார் ஓட்டலில் நடந்தது.இதில் மொத்தம், 10 அணிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில், 200க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், லட்சுமி காந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில், டிராவிட் வாரியர்ஸ் அணியினர், ரூ.94 ஆயிரத்திற்கு அதிகபட்சமாக ஏலம் எடுத்தனர்.இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் மேற்கொண்டனர். இந்த கிரிக்கெட் போட்டி வரும், ஜன.,12ம் தேதி துவங்கி, 5 நாட்கள் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி