சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
புதுச்சேரி: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நேற்று துவங்கியது.ஏழு தென் மண்டல கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டி, புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானம், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மைதானங்களில் நேற்று துவங்கியது.இப்போட்டியினை, புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட 7 மாநில கிரிக்கெட் அஸோசியேஷன்கள் இணைந்து இந்த போட்டித் தொடரை நடத்துகின்றனர். நேற்று சீகெம் மைதானம் 3 ல் நடந்த, போட்டியில் புதுச்சேரி அணி, கோவா அணி மோதின. முதலில் ஆடிய கோவா அணி 68.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி வீரர் தவனிஷ் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து விளையாடி வரும் புதுச்சேரி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. சீகெம் மைதானம் 4ல் தமிழ்நாடு அணியும், ஹைதராபாத் அணியும், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மைதானத்தில் கர்நாடகா, கேரளா அணிகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.