உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரைம் செய்திகள்: புதுச்சேரி

கிரைம் செய்திகள்: புதுச்சேரி

தொழிலாளி தற்கொலை: புதுச்சேரி; லாஸ்பேட்டை, ஆனந்த நகரைச் சேர்ந்தவர் அருணகிரி, 45; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய அருணகிரி, நேற்று மதியம் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி ஜோதியிடம் தகராறில் ஈடுபட்டார். அ ப்போது, மனைவி குழந்தைகள் உள்ளதால் சண்டை போட வேண்டாம் என கண்டித்துள்ளார். மனமுடைந்த அருணாகிரி வீட்டின் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மாஜி ரயில்வே ஊழியர் சாவு: வாணரபேட்டை, எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 69; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கலியமூர்த்தி, கடந்த 11ம் தேதி வீட்டில் சேரில் அமர்ந்திருந்தபோது, திடீரென மயக்கமடைந்தார். காயமடைந்த கலியமூர்த்தியை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். டைலர் சாவு: திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம், ஆவனிப்பூர் சாலையை சேர்ந்த முருகன், 49; டைலர். குடிப்பழக்கம் உடைய முருகன், மது அருந்த சேதராப்பட்டு பகுதிக்கு வந்து, பல நாட்கள் கழித்து வீட்டிற்கு செல்வது வழக்கம். கடந்த 2ம் தேதி வீட்டில் சேதராப்பட்டிற்கு மது அருந்த வந்த முருகன், மீண்டும் வீட்டிற்கு செல்லவில்லை. நேற்று சேதராப்பட்டு, மயிலம் ரோட்டில் மதுபோதையில் இறந்து கிடந்தார். சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை