உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பயிர் மேலாண்மை செயல் விளக்கம் 

பயிர் மேலாண்மை செயல் விளக்கம் 

திருபுவனை: வாதானுார் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த செயல் விளக்கம் நடந்தது. புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டத்தின் கீழ், மதகடிப்பட்டு பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், மதகடிப்பட்டு துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் வழிகாட்டுதலின்படி,  வாதானுார் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த செயல் விளக்கும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன், துணை வேளாண்மை அலுவலர் பக்கிரி மற்றும் மணக்குள விநாயகர் வேளாண் அறிவியல் கல்லுாரி மாணவிகள், விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை  குறித்து விளக்கி கூறினர். விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்கள் வழங்கப்பட்டன.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்