உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்து, 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். டி- நகர் சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கோரிமேடு எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, பின்னால் அமர்திருந்த நபர் கீழே இறங்கி தப்பி ஓடினார். இதையடுத்து, மொபட்டில் இருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த வசந்தகுமார் மகன் வேலன், 22; என்பதும், அவர் ஓட்டி வந்த மொபட் திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வேலனை கைது செய்து போலீசார், அவர் ஓட்டி வந்த மொபட் உட்பட 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவரின் கூட்டாளியான கடலுார், திருப்பாதிரிபுலியூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ