உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபர் கைது

பாகூர் : பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டிய கடலுார் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி - கடலுார் சாலை முள்ளோடை வார சந்தை அருகே வாலிபர் ஒருவர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து, விசாரித்தனர்.அவர், கடலுார், ஆல்பேட்டை கே.டி.ஆர். நகரை சேர்ந்த நந்தகுமார் 22; என்பதும், இவர் மீது கடலுார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை