உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெட்டு பிரேரணை எம்.எல்.ஏ.,கள் எதிர்ப்பு

வெட்டு பிரேரணை எம்.எல்.ஏ.,கள் எதிர்ப்பு

புதுச்சேரி: வெட்டு பிரேரணையை தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் வாசித்ததற்கு எம்.எல்.ஏ.,க்கள் நேரு, கார்த்திகேயன்(காங்) எதிர்ப்பு தெரிவித்தனர். புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பொருளாதார பிரேரணை வாசித்தார். அதற்கு பதிலளித்து தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெட்டு பிரேரணை வாசித்தனர். அப்போது, நேரு எம்.எல்.ஏ., காங்., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் ஆகியோர் எழுந்து, இந்த சபையில் நான்கு ஐந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால், நீங்கள் ஒரு கட்சிக்கு மட்டும் வெட்டு பிரேரணைக்கு வாய்ப்பு தந்துள்ளீர்கள். நாங்கள் வெளிநடப்பு செய்யலாமா என்றனர். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அன்பழகன் 'தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்து விடுங்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ