உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டிரைவருக்கு வெட்டு: இருவருக்கு வலை

டிரைவருக்கு வெட்டு: இருவருக்கு வலை

புதுச்சேரி: வில்லியனுார் அருகே டிரைவரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், வழபட்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 39; டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில் அரசூர் சாராயக்கடையில் சாராயம் குடித்து கொண்டிருந்தார்.அங்கு வந்த வில்லியனுார் கோபாலன் கடையைச் சேர்ந்த மைக்கேல், அய்யப்பன் ஆகியோர் ராஜாவிடம் தீப்பெட்டி கேட்டு வாங்கினர். பின் தீப்பெட்டியை ராஜவிடம் கொடுக்கவில்லை. தீப்பெட்டியை திருப்பிகேட்ட ராஜாவை அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலை, கை, காலில் வெட்டி விட்டு தப்பியோடினர்.ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர். இது தொடர்பாக ராஜா கொடுத்த புகாரின் பேரில் வில்லி யனுார் போலீசார் வழக்குப் பதிந்து மைக்கேல், அய்யப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை