மேலும் செய்திகள்
காரைக்குடியில் லாரி மீது விழுந்த மரம்
17-Oct-2026
நதிப்பாலம் ரோட்டில் சாய்ந்த மரம் அகற்றம்
20-Oct-2026
புதுச்சேரி: கல்வித்துறை வளாகம் பின்புறம் ஆபத்தான நிலையில் கட்டடத்தின் மீது சாய்ந்த பழமையான மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றம் பணியில் இன்று (அக்.,22) ஈடுபட்டனர். புதுச்சேரி, அண்ணா நகர் கல்வித்துறை வளாகத்திற்கு பின்புறம் உள்ள பகுதியில், தொடர் மழையின் காரணமாகப் பழமையான மரம் ஒன்று அருகில் இருந்த கட்டடத்தின் மீது சாய்ந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், எந்நேரத்தில் மரம் உடைந்த விழும் அபாயம் இருந்தது. இதனைத்தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கோரிமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயணைப்பு அதிகாரி ஜெயஸ்ரீ தலைமையில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, கட்டடத்தின் மீது சாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மரத்தை பார்வையிட்டு, மரத்தின் கிளைகளை நவீன இயந்திரங்களைக் கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
17-Oct-2026
20-Oct-2026