3 பேரிடம் நுாதன மோசடி சைபர் போலீசார் விசாரணை
புதுச்சேரி : முத்தியால்பேட்டையை சேர்ந்த நபருக்கு, அவரது நண்பரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி வந்தது. அதில், அவசர உதவிக்கு பணம் தேவைப்படுகிறது. கீழேயுள்ள கியூ.ஆர். குறியீடு மூலம் அனுப்பவும்என,தெரிவிக்கப்பட்டிருந்தது.இதை உண்மை என நம்பிய நபர், 12 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின், நண்பரை தொடர்பு கொண்டு பணம் அனுப்பியது குறித்து தெரிவித்தபோது, அவர் பணம் ஏதுவும் கேட்கவில்லை என தெரிவித்தார். அதன்பிறகே, மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.வெங்கடா நகரை சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து, 1,000 ரூபாய்க்கு துணி ஆர்டர் செய்து ஏமாந்தார்.புதுச்சேரியை சேர்ந்த நபர், திருப்பதி சிறப்பு தரிசனம் டிக்கெட் பெறுவதற்கு ஆன்லைனில் ஆயிரத்து 700 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.