மேலும் செய்திகள்
தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா
18-Aug-2025
வி . இ . டி ., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
05-Sep-2025
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் 'சைபர் பாதுகாப்பில் நவீன அச்சுறுத்தல்களும், அவற்றை எதிர்கொள்ளும் முறைகளும்' தலைப்பில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அடல் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி பட்டறை நடந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து, சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொழில்நுட்ப கட்டமைப்பில் உள்ள பாதுகாப்பு குறைகளை உடனுக்குடன் அறிந்து, பயனாளர்களை பாதுகாக்க உதவும் உத்திகளை உலகுக்கு வழங்க வேண்டியது அவசியம், என்றார். பல்கலைக்கழக கல்வி இயக்குநர் விவேகானந்தன் மற்றும் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப தலைவர் ஸ்ரீநாத் ஆகியோர் சைபர் பாதுகாப்பில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை விவரித்தனர். அண்ணா பொறியியல் கல்லுாரியின் ராமானுஜன் கணினி மையத்தின் இயக்குநர் புவனேஸ்வரன் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பேசினார். இன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு நிபுணர்கள் சைபர் குற்றங்களை தடுக்கும் நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்தனர். முன்னதாக, கணிப்பொறித்துறையின் தலைவர் இளவரசன் வரவேற்றார். பயிற்சி பட்டறையின் ஒருங்கிணைப்பாளர்கள் சரளா, ஷீபா நன்றி கூறினார். இதில், பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
18-Aug-2025
05-Sep-2025