மேலும் செய்திகள்
மகளிர் தின விழிப்புணர்வு
07-Mar-2025
புதுச்சேரி : புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி ரோட்டரி சங்கம், சைபர் கிரைம் போலீசார் இணைந்து மகளிர் தினத்தையொட்டி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பேராசிரியை அமுதா வரவேற்றார்.சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். பல்வேறு வகையில் மர்ம கும்பல்கள், மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்ற வழிமுறைகள் குறித்து, இன்ஸ்பெக்டர் தியாகராஜன், அபிநயா ஆகியோர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ரோட்டரி சங்க செயலாளர் சாதிக், முன்னாள் தலைவர்கள் ராம்பிரகாஷ், தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
07-Mar-2025