உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாட்ஸ் ஆப் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

வாட்ஸ் ஆப் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி : வாட்ஸ் ஆப்களில் வரும் மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் கூறுகையில், 'தற்போது மொபைல் வாட்ஸ் ஆப் குழுக்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து 'ஆர்.டி.ஓ., இ- சலான்' என்ற போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராதம் செலுத்துமாறு மொபைல் லிங்க் ஒன்று பகிரப்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்மநபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். ஆகையால் வாட்ஸ் ஆப்களில் வரும் இத்தகைய ஆர்.டி.ஓ.இ - சலான் லிங்க் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதேபோல், யோனோ எஸ்.பி.ஐ., (YONO SBI) என்ற பெயரில் வரும் லிங்க் கையும் யாரும் பதிவிறக்கம் செய்து பணத்தை ஏமாற வேண்டாம் என, எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ