உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ.ஆர்., படிவத்தை நிரப்ப ஓ.டி.பி., கேட்டால் தர வேண்டாம்; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

 எஸ்.ஐ.ஆர்., படிவத்தை நிரப்ப ஓ.டி.பி., கேட்டால் தர வேண்டாம்; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி: எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்ப ஓ.டி.பி., எண் கேட்டால் தர வேண்டாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடந்து வருகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் பொது மக்களை மொபைலில் தொடர்பு கொண்டு படிவம் நிரப்புவது சம்மந்தமாக பேசுகிறோம். அதில், உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி., வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்கின்றனர். அவ்வாறு யாரேனும் ஓ.டி.பி., கேட்டால் பகிரவேண்டாம். மேலும் எங்களுடைய ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் (பி.எல்.ஓ.,) நேரில் கொடுக்கிறோம் என்று கூறிவிடுங்கள். உங்களை கட்டாயப்படுத்தி கேட்கும் பட்சத்தில் அந்த அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்துக் கொண்டு, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது சைபர் கிரைம் 1930 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும். மேலும் உங்கள் தொகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலரின் பெயர், அவரின் மொபைல் எண்ணை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அவர்களை தொடர்பு கொண்டு தீர்த்துக் கொள்வதோடு, சைபர் மோசடிக்கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபர் குற்றங்கள் சம்பந்தமாக புகார் மற்றம் சந்தேகம் இருந்தால் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் 1930 மற்றும் 0413-2276144, 9489205246 ஆகிய எண்களிலும், cybercell-py.gov.inமின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.inபயன்படுத்தவும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்