உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆணையர் எழில்ராஜன் ஆய்வு

திருக்கனுார்: சோரப்பட்டில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி வருகிறது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி,அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, புயல் காரணமாக பொது மக்கள் பாதிக்காத வகையில், அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.அதன்படி, உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் அறிவுறுத்திலின்படி, மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்கவும், குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆணையர் எழில்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் நேற்றுகிராமப் புறங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி, சோரப்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் சன்னியாசிகுப்பம் கிராமங்களில் ஆய்வு செய்த ஆணையர்,மழைநீர் தேங்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். புயல் எச்சரிக்கை தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை