உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினக்கூலி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தினக்கூலி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி: பொதுப்பணித்துறையில், தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித் துறையில், முழு நேர தினக்கூலி ஊழியர்கள் 455 பேர் கடந்த 2016ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அதில், 36 பேர் பணி நிரந்தரம் செய்யாமல் இருந்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து பணி நிரந்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.சட்டசபை கூட்டத்தொடரில், 36 பேருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என, பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார். இதுவரை, அதற்கான நடவடிக்கை இல்லாததால், பொதுப்பணித்துறை அலுவலகத்தில், திருமுருகன், சுரேஷ்பாபு தலைமையில், நேற்று காலை 11:00 மணியளவில், 36 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதன்பேரில், போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ