மேலும் செய்திகள்
தீ விபத்தில் கூரை வீடு சேதம்
20-Jan-2025
வில்லியனுார் : வில்லியனுார் அருகே பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்பு கிடங்கு தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, லாஸ்பேட்டை ஜீவானந்தபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வில்லியனுார் அருகே மூலகுளம் சாலையில் தமிழக பகுதியானவிழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பெரம்பையில், கோபாலன்கடை எதிரே காலி மனை உள்ளது.ராதாகிருஷ்ணனின் மாமனார் கார்த்திகேயன், பொய்யாகுளத்தில் பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் கடை வைத்துள்ளார்.இங்கு வாங்கப்படும் பழைய பொருட்களை பெரம்பையில் ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான காலி மனையில் கொட்டி,தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று காலை 11:30 மணியளவில் பழைய பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்த வில்லியனுார், கோரிமேடு மற்றும் வானுார் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று, 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதில், ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.தீ விபத்து குறித்து ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலஹாசன்,சப் - இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
20-Jan-2025