மின் கம்பத்தால் விபத்து அபாயம்
பாகூர் : பாகூர் முருகன் கோவில் அருகே விரிசல் ஏற்பட்டு உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது.பாகூர் முருகன் கோவில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சித்தேரி வாய்க்கால் கரை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பத்தில் இருந்து மின் இணைப்புகள் பிரிந்து செல்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததால், மின்கம்பம் விரிசல் ஏற்பட்டு சேதமானது. ஆனால், இதுவரை அந்த மின் கம்பம் மாற்றப்படாமல் உள்ளதால், நாளுக்கு நாள் விரிசல் பெரிதாக கொண்டே செல்கிறது.இதனால், எந்த நேரத்தில் வேண்டுமானலும், அந்த மின் கம்பம் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், மின் துறையில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என புலம்புகின்றனர்.உடைந்த மின் கம்பத்தின் வழியாக செல்ல வாகன ஓட்டிகளும், குடியிருப்பு வாசிகளும் அச்சத்தில் உள்ளனர். எனவே, விரிசல் ஏற்பட்டுள்ள மின் கம்பத்தை விபத்து ஏற்படும் முன்பாக மாற்றி அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.