மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
26-Nov-2024
புதுச்சேரி : கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.விழுப்புரம் அடுத்த வானுார், இடையஞ்சாவடியை சேர்ந்தவர் பற்குணம் மகள் கார்த்திகா,20; இவர், முத்தியால்பேட்டை, கல்லுாரியில், பி.ஏ., பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து, கல்லுாரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார்.இரவு வேகு நேரமாகியும் வீட்டுக்கு வராததால், சந்தேகமடைந்த, பெற்றோர், பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
26-Nov-2024