உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : ஒருவருக்கு வலை

கோவில் நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் : ஒருவருக்கு வலை

புதுச்சேரி: கோவில் நிர்வாக அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். லாஸ்பேட்டை, செல்லபெருமாள்பேட்டையை சேர்ந்தவர் பக்தவச்சலம், 58. இவர், அங்குள்ள திரவுபதியம்மன் கோவிலில் அரசு சார்பு நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவில் நிர்வாக அதிகாரியாக பதவியேற்றதில் இருந்து, மேயர் நந்தகோபால் வீதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகம் தொடர்பாக தான் சொல்லும் படி மட்டுமே செயல்பட வேண்டுமென தெரிவித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் லாஸ்பேட்டை, ஐய்யனார் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் பக்தவச்சலம் வாடகை வசூல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், கடிதம் ஒன்றை கொடுத்து, கையெழுத்திட்டு, சீல் போட்டு தரும்படி கேட்டுள்ளார். இதற்கு, பக்தவச்சலம் மறுப்பு தெரிவித்தால், கோபமடைந்த கோபாலகிருஷ்ணன் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பக்தவச்சலம் புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கோபாலகிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி