உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சொகுசு கப்பல் போக்குவரத்தை தடை செய்ய வலியுறுத்தல்

சொகுசு கப்பல் போக்குவரத்தை தடை செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி : புதுச்சேரியில் சுற்றுலா சொகுசு கப்பல் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என, தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை;சுற்றுலா என்ற பெயரில் புதுச்சேரி நகரப்பகுதி முழுதும் கலாசார சீரழிவில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில் வெளிமாநில நிறுவனத்திற்கு சொந்தமானசூதாட்ட சொகுசு கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளது.கவர்னரின் நிர்வாகம் சொகுசு கப்பல் போக்குவரத்திற்குஅனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.சொகுசு கப்பலின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை முகத்துவார பகுதியில் மீன்பிடி படகுகள் சுற்றுலா படகுகள், பாய்மர படகுகள் தடை விதிக்கும் சூழல் ஏற்படுகிறது. மீனவ மக்களின் விரோதநிலை நீடித்தால் ஒட்டுமொத்த மீன்பிடி தொழில் மற்றும் சுற்றுலா படகு தொழில் பாதிக்கப்படும்.கப்பலில் வந்த நுாற்றுகணக்கான பயணிகளுக்காக பிரதான சாலையான அம்பேத்கர் சாலை மூடப்பட்டது. புதுச்சேரியில் கலாசார சீரழிவை ஏற்படுத்தும், சூதாட்ட சுற்றுலா சொகுசு கப்பல் போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.சொகுசு கப்பலுக்கு அரசு அனுமதி அளித்தால் மீனவ மக்களுக்காக தி.மு.க., மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்த நேரிடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை