உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வூதியர் மருத்துவ உதவித்தொகை நிறுத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் மருத்துவ உதவித்தொகை நிறுத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ஓய்வூதியர் மருத்துவ உதவித்தொகை நிறுத்தத்தை கண்டித்து அரசு ஊழியர் சம்மேளன இணைப்பு சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரியில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட ரூ. 1,000 மருத்துவ உதவித்தொகை இம்மாதம் முதல் வழங்கப்படாது. மத்திய அரசின் உத்தரவுபடி கட்டாய பிடித்தம் செய்வதாக கணக்கு மற்றும் கருவூலக இயக்குனர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு, ஓய்வூதியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவ உதவித்தொகை கட்டாய பிடித்தம் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளன இணைப்புச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கணக்கு மற்றும் கருவூலக இயக்கக அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், ஆனந்தராசன், புகழேந்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ உதவித்தொகை கட்டாய பிடித்தம் உத்தரவை திரும்ப பெற வேணடும். விருப்பம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவித்தொகையை தொடர்ந்து வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை