உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதிய மதுபான கொள்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதிய மதுபான கொள்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,: புதிய மதுபான கொள்கையை கைவிட வலியறுத்தி, இ.கம்யூ., சார்பில், கலால் துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநிலசெயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ்பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில்,புதிய மதுபான கடைகளுக்கு உரிமம், மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி,மதுபான விலை ஏற்றம், ஆகிய புதிய மதுபான கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, போதை பழக்கம் பெருகி கொலை,கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன.புதிய மதுபான கொள்கையால், ரூ.500கோடி காமராஜர் கல்வி கடன் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு செலவிடப்படும் என்ற கூற்றும் அபத்தமானது. மாநிலத்திற்கு, கேடு விளைவிக்கின்ற புதிய மதுபான கொள்கையை பா.ஜ., என்.ஆர்.காங்., அரசு கைவிட வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !