மேலும் செய்திகள்
மாணவர்கள் அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
16-Oct-2026
பா.ஜ., மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
11-Oct-2026
புதுச்சேரி பல்கலைக்கழக சுவற்றில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை இழிவுபடுத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக நுழைவு வாயில் எதிரில் நேற்று மாலை நடந்தது. பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் ஆடல் அரசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் தமிழ்மாறன், மகளிரணி தலைவி தாமரைச்செல்வி, பட்டியலின அணித் தலைவர் காத்தவராயன், உழவர்கரை மாவட்டத்தலைவர் உலகநாதன், நகர மாவட்டத்தலைவர் கிருஷ்ணராஜ், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் கருணாகரன், காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் முருகன், வணிக பிரிவுத் தலைவர் சத்யராஜ், மாவட்ட பொது செயலாளர் ஆனந்தன் மற்றும் பா.ஜ., பல்வேறு அணிகள், மாவட்டங்கள், தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் குணசேகரன் ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
16-Oct-2026
11-Oct-2026