டெங்கு விழிப்புணர்வு
புதுச்சேரி: ஜிப்மர் ராமநாதபுரம் கிளை சார்பில், தொணடமாநத்தம் அடல் பிகாரி வாஜ்பாய் அரசு தொடக்கப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் புதுவைக்கனி கலந்து கொண்டு டெங்கு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி, ஏடீஸ் கொசு குறித்தும், டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி, சுற்றுப்புறத் துாய்மை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள் காயத்ரி, ஈஸ்வரி, குமரேசன், லட்சுமி, அபிராமி, காந்தி, பாக்கியலட்சுமி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.