உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ‘போர்க்கால அடிப்படையில் டெங்கு தப்பு நடவடிக்கை தேவை’: விசார் விபாக் வலியுறுத்தல்

‘போர்க்கால அடிப்படையில் டெங்கு தப்பு நடவடிக்கை தேவை’: விசார் விபாக் வலியுறுத்தல்

புதுச்சேரி: டெங்கு தடுப்பு நடவடிக்கையை, போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் என புதுச்சேரி பிரதேச காங்., விசார் விபாக் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, விசார் விபாத் தலைவர் பிரதீஷ் இருதயராஜ் அறிக்கை; புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துத் தொகுதிகளிலும் தீவிர கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதுச்சேரியில் உள்ள (வி.சி.ஆர்.சி.,) விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையை ஏன் முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது? கொசு ஒழிப்புக்கான அறிவியல் ரீதியான வழிமுறைகளை இந்த நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். கடந்த காலங்களில் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து, கொசு ஒழிப்பு மருந்துகளைத் தெளித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தனர். அந்தப் நடைமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். முதல்வர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, டெங்கு தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ