மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
வில்லியனுார்: கோர்காடு அரசு பள்ளியில் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது. கோர்காடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கினார். பொறுப்பு ஆசிரியர் எழில்மாறன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கரிக்கலாம்பாக்கம் சுகாதார நிலைய தலைமை மருத்துவர் திருமலை, டாக்டர் கீர்த்திவாசன் மற்றும் சுகாதார ஆய்வாளர் வெங்கடபதி ஆகியோர் பங்கேற்று டெங்கு நோய் தடுப்பு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.
05-Sep-2025