மேலும் செய்திகள்
வாகனம் மோதி முதியவர் பலி
08-Dec-2024
புதுச்சேரி: முதல்வரின் துணை தனி செயலாளர் சாலை விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுச்சேரி, மூலக்குளம் ராதாகிருஷ்ணன் நகர், 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்அரிமா, 34; முதல்வர் ரங்கசாமியின் துணை தனி செயலர். இவர் நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக தனது பி.ஓய் 01 ஜி 2829 பதிவெண் கொண்ட ஸ்கூட்டியில் காலாப்பட்டு சென்றுள்ளார். பின்னர், வேலை முடிந்து நேற்று அதிகாலை 1:00 மணியளவில் சின்ன காலாப்பட்டு இ.சி.ஆர் வழியாக வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி திடீரென ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்தகாயமடைந்தார், சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர் ஓடிவந்து, தமிழ்அரிமாவை மீட்டு, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தமிழ்அரிமா ஆபத்தான நிலையில்,சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த முதல்வர் ரங்கசாமி, தமிழ்அரிமாவிற்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து முதல்வர் உத்தரவின் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து அவரது மனைவி சுபாஷினி அளித்த புகாரின் பேரில், வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
08-Dec-2024