உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாடித்தோட்டம் அமைத்தல் செயல்முறை விளக்கம்

மாடித்தோட்டம் அமைத்தல் செயல்முறை விளக்கம்

நெட்டப்பாக்கம்: காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில், கரையாம்புத்துார் கிராமத்தில் மாடித்தோட்டம் அமைத்தல் செயல்முறை விளக்கம் அளித்தனர். காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு அரசு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதி ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கரையாம்புத்துார் பகுதியில் களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கரையாம்புத்துார் வேளாண் அலுவலர் வினோத் கண்ணன் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் தமிழ்க்குடிமகன், ராஜேஷ், சஞ்சய், சிவானந்தம், சத்தியபாலன், அஷ்வின் குமார், ஆகாஷ், தணிகை மற்றும் விஷால் ஆகியோர் இணைந்து, அப்பகுதியை சேர்ந்த விவசாயி புனிதா என்பவரது இல்லத்தில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினர். மாணவர்கள் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்காக தொழு உரம் மற்றும் பசுஞ்சாணம் ஆகிய இயற்கை உரங்களை மண்ணுடன் கலந்து பாலித்தீன் பைகளில் நிரப்பினர். பின் அவற்றில் வெள்ளரி, பாலக்கீரை, தக்காளி, மிளகாய், பீர்க்கங்காய், சுரைக்காய், தட்டைப்பயறு மற்றும் பீன்ஸ் ஆகிய காய்கறி விதைகளை நேர்த்தியான முறையில் விதைத்து செயல்முறை பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை கரையாம்புத்துார் மாணவர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை