| ADDED : பிப் 01, 2024 11:35 PM
புதுச்சேரி: நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என, இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.கூட்டமைப்பு புதுச்சேரி கிளை தலைவர் ஜோசப் ரோஜாரியோ அறிக்கை:மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் வீடுகளில் சோலார் நிறுவலை ஊக்குவிப்பது, மின்சார வாகனங்கள் உற்பத்தி, அதற்கான சார்ஜிங் நிலையங்கள் போன்றவை வாகன துறையை பெரிய அளவில் ஊக்குவிக்கும்.பட்ஜெட்டில் பசுமை எரிசக்திக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது புதிய வேலை வாய்ப்புகளை கொண்டு வர உதவும்.ஆராய்ச்சி, முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதால், உலக நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்களின் தொழில்நுட்பத் தரம் உயரும். உள்கட்டமைப்பு மேம்பாடு, புதிய ரயில்வே திட்டங்கள், 40,000 சாதாரண ரயில் பெட்டிகளை வந்தே பாரத் நிலைகளாக மாற்றுதல். புதிய விமான இணைப்பு அறிமுகம், துறைமுக மேம்பாட்டு நடவடிக்கைகள் நமது பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும்.இது நிலையான மற்றும் வளர்ச்சி சார்ந்த இடைக்கால பட்ஜெட். இந்த பட்ஜெட்டினை இந்திய தொழில் கூட்டமைப்பு வரவேற்கிறது.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.