உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலை மாணவிக்கு வாந்தி மயக்கமா? டீனுடன் அ.தி.மு.க., அன்பழகன் வாக்குவாதம்

பல்கலை மாணவிக்கு வாந்தி மயக்கமா? டீனுடன் அ.தி.மு.க., அன்பழகன் வாக்குவாதம்

புதுச்சேரி: மாணவியிடம் அத்துமீறல் விவகாரத்தில் பல்கலை வார்டனிடம் அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில், அத்துமீறி நுழைந்த சிலர், அங்கிருந்த மாணவியில் அத்துமீறிய சம்பவம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.இவ்விவகாரம் குறித்து அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் நேற்று முன்தினம் பல்வேறு கேள்வி எழுப்பி பேட்டியளித்தார்.அப்போது அவர், பல்கலை அட்மின் டீனுக்கு போன் செய்து மாணவிக்கு என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு எதிர்முனையில் பேசிய டீன், அந்த பெண்ணை ஆம்புலன்ஸில்தான் அழைத்துச் சென்றோம். ஆனால் தலைவலி, வாந்திக்கு எதற்கு ட்ரீட்மெண்ட் என்று கூறி எம்.எல்.சி., வேண்டாம் என அழைத்து வந்துவிட்டோம் என்றார்.கடுப்பான அன்பழகன், நீங்க வார்டன்தானே.. எம்.எல்.சி போடவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள். அன்று போடப்பட்ட எம்.எல்.சி-.,யில் தன்னை 4 பேர் தாக்கியதாக அந்த மாணவி கூறியுள்ளார். பிறகு ஏன் எம்.எல்.சி போடவில்லை. இதற்கு, உங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா..நீங்கள் பொய் சொல்லக்கூடாது. நீங்கள் யாரையாவது காப்பாற்றுவதற்காக பேசினால் உங்களுக்கு பிரச்னை வந்து விடும். ஆனால் நீங்கள் எம்.எல்.சி., போடவில்லை என்கிறீர்கள். அந்த எம்.எல்.சியை உங்களுக்கு அனுப்பி வைத்து, கவர்னரிடம் உங்களைப்பற்றிச் சொல்லலாமா என்றார்.நீங்கள் அந்த மாணவியுடன் மருத்துவமனைக்குச் சென்றீர்களா என்றதற்கு, இல்லை. வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவலை வைத்துச் சொல்கிறேன் என்றார்.மருத்துவமனைக்குப் போகாமலேயே பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல வாந்தி, பேதி என்கிறீர்கள். போனை வையுங்கள் என கடிந்து கொண்டார்.அன்பழகனின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !