உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தினமலர் - பட்டம் வினாடி வினா

 தினமலர் - பட்டம் வினாடி வினா

புதுச்சேரி: வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் நடந்த, தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வீராம்பட்டினம் ஜீவரத்தினம் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், தினமலர் - பட்டம் நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில், 8 அணிகள் பங்கேற்றன.8ம் வகுப்பு மாணவிகள் ஆராதனா, சங்கமித்ரா முதலிடம் இடத்தையும், மாணவிகள்சுனேகா ஸ்ரீ,கரிஷ்மா இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர். இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவிகளுக்கு தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சிவசங்கரன் பாராட்டிபரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். தலைமையாசிரியை மரிர்கரத், ஆசிரியர் சித்திரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ