மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
20-Jan-2026
புதுச்சேரி: வம்பாகீரப்பாளையம், தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த தினமலர் பட்டம் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார். வம்பாகீரப்பாளையம், தட்சணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழின் வினாடி வினா போட்டி நடந்தது. 8 அணிகள் பங்கேற்றன. இதில், 8ம் வகுப்பு மாணவர்கள் வைரவன், சஞ்சுமுதலிடத்தையும்,9ம் வகுப்பு மாணவர்கள் சாந்தனு, அபினேஷ் 2ம் இடத்தையும் பிடித்தனர். பட்டம் வினாடி வினா இறுதி சுற்றுக்கு தேர்வான மாணவர்களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். பள்ளியின் பொறுப்பாசிரியர் பெபினா, ஆசிரியர்கள் பெனடிக்ட் டியூடெம்பிள், இக்பால் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.
20-Jan-2026