ஆச்சார்யா சிக் ஷா மந்திரில் தினமலர் - பட்டம் வினாடி வினா
புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின், வினாடி- வினா போட்டி நடந்தது. பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 16 மாணவ, மாணவிகளை 8 அணிகளாக பிரித்து இரண்டாம் சுற்று போட்டி நடந்தது. அதில், 9ம் வகுப்பு மாணவிகள் சங்கீர்த்தனா, திக் ஷா அணி முதலிடத்தையும், மாணவிகள் காரு ண்யா, அக் ஷதா அணி 2ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் முகமது பரூக், ஆசிரியர் முகமது சுலைமான் பரிசு வழங்கி பாராட்டினர். போட்டியில், பங்கேற்ற மாணவர்களுக்கு 'தினமலர்' - பட்டம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் முதலிடத்தை பிடித்த மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.