உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆசிரியர்களை கவுரவிக்கும் தினமலர்

ஆசிரியர்களை கவுரவிக்கும் தினமலர்

செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தின விழா. ஆசிரியரைப் பற்றி நினைக்காத மாணவர்கள் கூட தங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களை ஆசிரியர் தினத்தன்று வாழ்த்தி மகிழ்வர். மத்திய அரசும், மாநில அரசுகளும் தங்கள் பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. இந்த நடைமுறை எல்லா மாநிலங்களிலும் உண்டு. வழக்கமாக விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் பட்டியலை அரசு வெளியிடும். அது மறுநாள் நாளிதழ்களில் வெளியாகும். இதுவே வழக்கமாக இருந்து வந்த நடைமுறை ஆகும். 'தினமலர்' சார்பில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி துவங்கிய பின் கல்வித்துறை அதிகாரிகளுடன் தினமலருக்கு நெருக்கம் அதிகமானது. ஒரு சமயம் புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகளுடன் 'தினமலர்' நிருபர்கள் பேசிக் கொண்டிருந்தபோது சம்பிரதாயத்திற்காக வெளியிடப்படும் அறிக்கைகளும், விழாக்களின் நிலையை மாற்ற வேண்டும் என்றனர். அதற்கு, என்ன செய்யலாம் என அதிகாரிகள் வினவினர். அதற்கு, விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியரின் பெயர்களை மட்டும் கொடுக்காமல், அவர்களின் புகைப்படத்துடன் 'பிரஸ்நோட்' கொடுக்க வேண்டும் என 'தினமலர்' சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்ற புதுச்சேரி கல்வித்துறை அதிகாரிகள் 2005ம் ஆண்டுக்குப் பின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களின் பெயர்களுடன், புகைப்படத்தையும் கொடுத்தனர். அதுமுதல் 'தினமலர்' நாளிதழ் ஆசிரியர் விருது பெரும் ஆசிரியர்களை புகைப்படத்துடன் வெளியிட்டு, அவர்களை கவுரவித்து வருகிறது. இந்த நடைமுறை, இன்றளவும் புதுச்சேரி தினமலரில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. ஆசிரியர் தின விழா முடிந்ததும், விழாவில் விருது பெரும் ஏதேனும் ஒரு ஆசிரியர் படத்தை வழக்கமாக மறுநாள் நாளிதழ்கள் வெளியிட்டு வந்தன. பல ஆசிரியர்கள் விருது பெரும் விழாவில் ஒரு ஆசிரியரின் படத்தை மட்டும் வெளியிடுவது மற்ற ஆசிரியர்களுக்கு மனவருத்தத்தை ஏற்பாடுத்தும் என தினமலர் நினைத்தது. இந்த வழக்கத்தை மாற்றி, விருது பெரும் அனைத்து ஆசிரியர்களும் சிறப்பு விருந்தினருடன் 'குரூப் போட்டோ'எடுக்க கல்வி துறை ஏற்பாடு செய்தால் அதை மறுநாள் நாளிதழ்களில் வெளியிடும் என தினமலர் சார்பில் தீர்வு சொல்லப்பட்டது. அதனையேற்ற, கல்வித்துறை அதிகாரிகள் 2010ம் ஆண்டிற்கு பின் அரசு சார்பில் நடக்கும் ஆசிரியர் தின விழா முடிந்ததும், விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் சிறப்பு விருந்தினருடன் குரூப் போட்டோ எடுக்கும் வழக்கம் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டு தோறும் இந்த குரூப் போட்டோவையே மறுநாள் 'தினமலர்' நாளிதழ் வெளியிட்டு வருகிறது. தினமலரின் இம்முயற்சியை, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டி மகிழ்ந்தனர். ஆசிரியர்களை பாராட்டுவதில் புதுச்சேரி 'தினமலர்' முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை