உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தினமலர் என்றாலே பிரமாண்டம் :முன்னாள் எம்.எல்.ஏ., பேட்டி

தினமலர் என்றாலே பிரமாண்டம் :முன்னாள் எம்.எல்.ஏ., பேட்டி

புதுச்சேரி: 'தினமலர்' எக்ஸ்போவை பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் பார்வையிட்டார். புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக மைதானத்தில் 'தினமலர்' மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியை நேற்று, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., செல்வம் பார்வையிட்டார். கண்காட்சியில் உள்ள அரங்குகளை பார்வையிட்ட அவர் கூறுகையில், 'தினமலர்' எக்ஸ்போ என்றாலே பிரமாண்டம் தான். புதுச்சேரி மற்றும் கடலுார், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். வீட்டு உபயோக பொருட்கள் மட்டுமின்றி ஆட்டோ மொபைல், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், மூலிகை பொருட்கள், பாரம்பரிய பொருட்கள் என அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும். பொதுமக்களுக்கு சேவை நோக்கத்தோடு ஆண்டுதோறும் எக்ஸ்போ நடத்திவரும் தினமலர் நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை