தினமலர் நீட் மாதிரி தேர்வு மாணவி பாக்யா முதலிடம்
புதுச்சேரி:தினமலர் -மற்றும் ஸ்பெக்ட்ரா நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வில், மாணவி பாக்யா முதலிடம் பிடித்து அசத்தினார்.தினமலர்-ஸ்பெக்ட்ரா நிறுவனம் இணைந்து நேற்று நடத்திய நீட் மாதிரி தேர்வினை மாணவர்கள் ஆர்வமுடன் எழுதினர். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடையை வட்டமிட்டனர்.தொடர்ந்து மாணவர்களின் ஓ.எம்.ஆர்., விடைத்தாள் திருத்தப்பட்டு இரவு 9:00 மணியளவில் ரிசல்ட் வெளியிடப்பட்டது.மாணவி பாக்யா 720 மதிப்பெண்ணிற்கு 649 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். அவர் இயற்பியலில்-143, வேதியியலில்-175 உயிரியலில்-331 மதிப்பெண் எடுத்தார்.மாணவி அக் ஷா 632 மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், மாணவி ஹர்ஷினி 623 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம், மாணவர் மோகித் 610 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம், மாணவர் சஞ்சய் 600 மதிப்பெண்ணுடன் ஐந்தாம் இடம் பிடித்து அசத்தினர்.