உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

தேக்வாண்டோ வீரர்களுக்கு பெல்ட் வழங்கும் விழா

புதுச்சேரி : தேக்வாண்டோ சங்கம் சார்பில் பயிற்சி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பெல்ட் வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி தேக்வாண்டோ சங்கம் சார்பில் 30வது மாநில அளவிலான தேக்வாண்டோ பெல்ட் வழங்கும் விழா, நைனார்மண்டபம் அன்னை தெரசா பள்ளியில் நேற்றுமுன்தினம் நடந்தது. சங்க செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜவேலு, பயிற்சியைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தேக்வாண்டோ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சாகசங்கள் செய்தனர். பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாலையில் நடந்த விழாவில் பெல்ட் வழங்கப்பட்டது. மீராகுமார் வரவேற்றார். சங்கத் துணை செயலாளர் பகவத்சிங் நன்றி கூறினார். பயிற்சியாளர் சிட்டிபாபு, தேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ