உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத்திறனாளர் அமைப்பு கவர்னரிடம் கோரிக்கை மனு

மாற்றுத்திறனாளர் அமைப்பு கவர்னரிடம் கோரிக்கை மனு

புதுச்சேரி: மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க நிதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவர்னர் கைலாஷ்நாதனிடம் மனு அளித்தனர். புதுச்சேரி மாற்றுத்திறனாளர் அமைப்புகளின் பேரவை சார்பில், நிர்வாகிகள் கவர்னரை சந்தித்து அளித்துள்ள மனு; மாற்றுத்திறனாளிகளை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆரம்பகால சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை பராமரிக்க, பராமரிப்பு நிதி, வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அரசு மூலம் வழங்கப்படும், இலவச மனை பட்டா மற்றும் இலவச தொகுப்பு வீடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கி, முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும், மாற்றுத்திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அமைப்பு பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், வாஞ்சிலிங்கம், முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ