பாரதி வீதியில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்
வியாபாரிகள் - அதிகாரிகள் வாக்குவாதம்புதுச்சேரி: பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது, அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததால், பரபரப்பு நிலவியது.புதுச்சேரி சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பால் நிரம்பி வழிகிறது. மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் அடிக்கடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நேற்று புதுச்சேரி பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.பாரதி வீதியில் 25 அடி அகல சாலை, இரு பக்கமும் தலா 4 அடி நடைபாதை, ஒன்றரை அடி வாய்க்கால் என, மொத்தம் 36 அடி அகல சாலை உள்ளது. ஆனால், இரு பக்கமும் பல அடி துாரத்திற்கு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.நடைபாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள படிகட்டு, சாய்தளம், இரும்பு கிரீல் கேட்டுகளை அகற்றினர். அப்போது, சிலவியாபாரிகளே தங்களேஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுத்தது. சில இடங்களில் அவகாசம் இன்றி இடிக்கப்பட்டது. அப்ேபாது பாரபட்சமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறி வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுப்பட்டனர். எதிர்ப்புகள் எழுந்த இடங்களில் எல்லாம், ஆக்கிரமிப்புகளை மாலைக்குள் அகற்றி கொள்ள அவகாசம் கொடுத்து விட்டு நகராட்சி அதிகாரிகள் சென்றனர்.