மேலும் செய்திகள்
பொது இடத்தில் தகராறு: 2 பேர் கைது
12-Oct-2024
புதுச்சேரி: பொது மக்களிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி காமராஜர் மணிமண்டபம் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்த சசிதரன், 25; என்பது தெரியவந்தது. பின்னர், சசிதரன் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதேபோல், ரெட்டியார்பாளையத்தில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சக்திவேல், 35; முத்தியால்பேட்டை பகுதியில் தகராறில் ஈடுபட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த தமிழ்மணி,23; அரவிந்த், 31; ரெயின்போ நகரை சேர்ந்த நிவாஸ், 24; உருளையன்பேட்டையில் தகராறில் ஈடுபட்ட நெல்லித்தோப்பை சேர்ந்த இளங்கோவன், 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
12-Oct-2024