உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சோரியாங்குப்பத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

 சோரியாங்குப்பத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. சோரியாங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நலப்பணிச் சங்கத்தின் துணைத் தலைவர் காவலர் கணபதி வரவேற்றார். தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, 'சுற்றுச்சூழல் பாதுகாப்பும் நல வாழ்வும் என்ற தலைப்பில் பேசினார். ஆலோசகர்கள் விரிவுரையாளர் முத்துஐயாசாமி, ஆசிரியர் தனராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொறுப்பாளர்கள் பவித்ரா, கேசவர்த்தினி, மாதவி ஆகியோர் நோக்கவுரையாற்றினர். மாணவிகள் வர்ஷா, பிரீத்தி, சுடர்தேவி, தர்ஷிகா, சாரதா, போனிஷா சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துக் கருத்துரையாற்றினர். நிகழ்ச்சியில், பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மண்டல அமைப்பாளர் கலைமாமணி ராஜாராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை