மேலும் செய்திகள்
கொடிக்கம்பங்களை அகற்றினால் மட்டும் போதுமா?
30-Jun-2025
புதுச்சேரி: புதுச்சேரியில் குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் ஸ்வச்தா கார்ப்பரேஷன் மூலம் குப்பைகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் காலம் முடிந்தது. இதனையடுத்து புதிதாக டெண்டர் விடப்பட்டது. முன் அனுபவம் இல்லாத கிரீன் வாரியார் நிறுவனத்தை உள்ளாட்சித்துறை தேர்வு செய்தது. இதில் பல கோடி லஞ்சம் கைமாறியதாக குற்றச்சாட்டு உள்ளது.புதிய நிறுவனம் தொட்டிகளை வைக்காமல் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால் வீடு தோறும் சென்று குப்பை சேகரிக்கப்படவில்லை. சில இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் மக்கள் ஏற்கனவே குப்பை தொட்டிகள் இருந்த இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் புதுச்சேரி முழுதும் துார் நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும், ஏற்பட்டுள்ளது. இதனை தி.மு.க., கண்டிக்கிறது. உடனடியாக புதுச்சேரி முழுதும் குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் மக்களை திரட்டில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
30-Jun-2025